Tuesday, August 10, 2010

வருடாந்திர பயிற்சி முகாம்

வருடாந்திர பயிற்சி முகாம்

இன்னும் சில தினங்களில் வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்க உள்ளது

உலகின் அனைத்து நாடுகளிலும் இது நடைபெறுகிறது.இது முப்பது நாட்கள் நடைபெறும்.இதற்க்கு வயதுவரம்பு இல்லை.யாரேல்லாம் ஆரோக்கியமாக உள்ளனரோ அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த பயிற்சியை பெறவேண்டும்.கர்ப்பிணி பெண்கள்,மற்றும் நோயாளிகள்,தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோருக்கு சலுகைகள் அளிக்கபடுகிறது.

கர்ப்ப காலம் ,நோய் ,தாய்பால் கொடுக்கும் காலம் முடிந்த பின் இந்த பயிற்சியை பெறவேண்டும்.

கடந்த ஆண்டு முழுமையாக பயிற்சி பெறாமல் இருந்தவர்கள் இது வருடந்தோறும் நடைபெறுவது தானே என்று ஏனோதானோவென்று பயிற்சி பெறுவார்கள்.

ஆனால் இந்த பயிற்சியின் பயனை வருடம் முழுவதும் அனுபவிததினால் கடந்த ஆண்டு பயிற்சியை முழுமையைக பெற்றவர்கள் இந்த ஆண்டும் ஆர்வத்தோடு கலந்து கொள்வார்கள்.

இந்த பயிற்சியின் நோக்கம்

இந்த பயிற்சி அளிக்கபடுவதின் நோக்கம் இந்த ஒட்டுமொத்த அண்ட சராசரங்களின் அதிபதியான ஏக பரம்பொருளை அவனுடைய உண்மையான தன்மைகளின் அடிப்படையில் புரிந்துகொள்வதும்,அவனுடைய அருளை இந்த உலகிற்காகவும் ,மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்விற்காகவும் பெற்றுகொள்வது மட்டுமில்லாமல்
தன்னை முழுக்க முழுக்க ஏக பரம் பொருளாகிய இறைவனிடம் ஒப்படைபதே நோக்கம்.

அதாவது இந்த உலகில் சிலர் பொருளாதாரத்தில், அறிவாற்றலில்,அரசியலில் ,சமூகத்தில் மேலாண்மை உள்ளவர்களாக இருப்பர்.அதனால் பிற மக்கள் முன்னிலையில் தங்களை மாமனிதர்களாய் காட்டி தங்கள் கீழ் உள்ள மக்களை அடிமைகளாய் நடத்துவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளே.இவர்கள் இந்த பயிற்சியை முழுமையாக பெற்றால் நாம் எவ்வளவுதான் பெரிய மனிதர்களாய் இருந்தாலும் நமக்கு மேல் இறைவன் இருக்கிறான் அவன் நாடினால் நாம் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவோம் என்ற எண்ணத்தை இந்த பயிற்சி அவருக்கு உணர்த்தும்.

ஒட்டுமொத்த பயிற்சி காலங்களிலும் நாம் நோன்புதான் வைக்கிறோம்.நோன்பல்லாத இன்ன பிற செயல்களை நாம் செய்கிறோம்.ஆனால் அதன் பலன்களை நாம் உணர்வதில்லை.

பயிற்சியின் கால பாடங்கள்

பயிற்சியின் கால பாடங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பத்து நாட்களிலும் கற்று கொடுக்கபடுகிறது.


இறைத்தூதர் முகமது (ஸல்) அவர்கள் இந்த பயிற்சி காலத்தை மூன்று பாகங்களாக பிரித்து காட்டியுள்ளார்கள்.அதன்படி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191

சரி ,நடைமுறையில் நாம் இந்த நோன்பின் போது பசிதிருபது மட்டுமே காண்போம் ஆனால் பசிதிருபது நோக்கம் இல்லை இதன் மூலம் நாம் உளவியல்ரீதியாக நம்மை
இறைவனிடம் ஒப்படைபதே நோக்கம்.

மேலே கோடிட்டுக் காட்டி உள்ள இறைதூதரின் வாக்கை நன்கு கவனித்தால் அருட்கொடை ,பாவமன்னிப்பு ,நரக மீட்சி இவை அனைத்தையும் நாம் பெற வேண்டி இந்த பயிற்சி அளிக்கபடுகிறது.

இந்த பயிற்சியின் மூலம் நாம் இவைகளை பெறவில்லை என்று சொன்னால் பசிதிருபதால் பயன் இல்லை.

ஒருவன் பொய் பேசுவதையும்,புறம் பேசுவதையும் விடவில்லையோ
அவன் பசிதிருபதும் ,தாகித்திருபதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை

என்ற இறை தூதரின் வாக்கை சொல்லி முடிக்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு
http://tvcode.blogspot.com/2009/08/blog-post_2601.html

No comments:

Post a Comment