Wednesday, November 10, 2010

நீதி என்பது நீதியே அல்ல

என்னை பொருத்தவரை மக்களிடம் ஒரு மாற்றம் தெரிகிறது.தவறு செய்தவன் தண்டிக்கப்படவேண்டும் அதுவும் அந்த தவறால் பாதிகபடுபவர்களின் முன்னிலையில் அல்லது அவர்கள் அறிவுக்கு எட்டுகின்ற நிலையில் தண்டிக்கப்படவேண்டும் இதன் மூலம் அந்த பாதிப்பின் காயம் கொஞ்சம் ஆறும் மேலும் இவ்வாறான தவறுகள் குறைய ஆரம்பிக்கும்.

பொதுவாக இந்திய சமூகவியலில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.நாம் எத்தனயோ என்கவுன்டர்களை பார்த்து இருக்கிறோம்.இது திட்டம் இடப்பட்ட படுகொலையே (என்கவுன்டர்) ஒரு வழக்கில் ஒரே குற்றத்திற்காக விசாரணை கைதியாக அழைத்து செல்லப்பட்ட இருவர் இரு வேறு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டதே இதை படுகொலைதான் என்பதற்கு ஆதாரமாக நாம் சொல்லலாம்.

இன்றைய அரசியல் சூழலும் மக்களுக்கு நன்மை பயபதாய் இல்லை.குற்றங்கள் மலிந்து கிடக்கிறது.நான் சொல்லுவது தமிழ்நாட்டை மட்டும் இல்லை ஒட்டு மொத்த இந்தியாவை தான் சொல்லுகிறேன்.பல்வேறுபட்ட கலாச்சார குழுமமான நமது இந்தியா தேசத்தில் வசதிபடைதவன் ,கொஞ்சம் புத்திசாலித்தனம் உள்ளவன் ,அரசியல் செல்வாக்கு உள்ளவன் எந்த தவறையும் செய்துவிட்டு சர்வ சாதரணமாக உலா வருகிறான் ஆனால மோகனகிருஷ்ணன் போன்ற பாமரன் தவறு செய்யும்போது இப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக வேண்டி வருகிறது.

இப்படி பட்ட நிறம்மாறும் நியாங்களால் மக்கள் தங்களின் குணங்களை மாற்றிக்கொள்ள தள்ளபடுவார்கள் அதன் விளைவு இநதிய தேசம் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போய்விடும்.

அவ்வாறு நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் சிலவற்றை நாம் மாற்றி அமைக்க வேண்டும் அவையாவன

மக்கள் நலன் கருதும் ஒழுக்கம் உள்ள நபர்களை அரசியலில் ஆதரிக்க வேண்டும் .

மனிதாபிமானம் இல்லாத ,சுயநலத்தோடு செயல்படும் அரசியல் வாதிகளை அரசியளைவிட்டே விரட்டவேண்டும்

சிறுவர் ,சிறுமிகள் ,இளைஞ்ஞர்கள் ஆகியோரிடம் நல்ல பண்பு நலன்களை பரப்பும் முகமாக தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

சமூக ,கலாச்சார வழிமுறைகள புறந்தள்ள செய்யும் வகையில் வெளியாகும் சினிமா ,பத்திரிகை ,வானொலி போன்றவற்றை முற்றிலுமாக தடைசெய்யவேண்டும்

இந்த தண்டனை எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டும்.பிறருடைய உரிமையில் யார் குறுக்ககீடு செய்தாலும் அது குற்றமே.இருபவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி என்பது நீதியே அல்ல.          

No comments:

Post a Comment